Menu Left Menu Right
முக்கிய செய்திகள்
73 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை
Default

ஜப்பானைச் சேர்ந்த 73 வயது பெண், எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பனிக்காலம் முடிந்ததும், நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில், 110 பேர் மலை ஏறத் துவங்கினர். 8,848 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில், ஜப்பானைச் சேர்ந்த 73 வயது தமே வட்டானபியும் ஏறி, சாதனை படைத்துள்ளார். மலை ஏறும் குழுவில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 12 பேர் உட்பட, 13 பேர் இந்தியர்கள். ஜப்பானைச் சேர்ந்த வட்டானபி, கடந்த 2002ம் ஆண்டு, தனது 63வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய வயதான பெண் என்ற சாதனை படைத்தார். 10 ஆண்டுகள் கழித்து, கடந்த 19ம்தேதி இவர், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த விழாவில், வட்டானபிக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது அவர் குறிப்பிடுகையில், "கடந்த 10 ஆண்டுகளில், எவரெஸ்ட் நிறையவே மாற்றமடைந்துள்ளது,' என்றார். எவரெஸ்ட் சிகரத்தை, 21 முறை ஏறி உலக சாதனை படைத்த, அபா ஷெர்பா,51 என்பவரும், இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டார். அவருக்கும், கின்னஸ் சாதனை சான்றிதழ் அளிக்கப்பட்டது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!