Menu Left Menu Right
முக்கிய செய்திகள்
வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்! காதலரை மணந்த பிரியங்கா!!
Default

பரத் நடித்த வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா. இப்படத்தில் பசுபதிக்கு ஜோடியாக தனது நடிப்பை வெளிப்படுத்தினாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கமுடியவில்லை. இதனால் தெலுங்கு, மலையாளத்திற்கு தாவினார். அங்கு சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய அவருக்கும், ஓம்கராம் என்ற படத்தின் இயக்குனர் லாரன்ஸ் ராமுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்டினர். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வைத்து அவர்களின் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு பிரியங்கா கூறுகையில், மனதிற்கு பிடித்தவரையே மணந்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதற்கு எனது கணவர் தடை போடவில்லை. அதனால் வாய்ப்பு கிடைத்தால் நல்ல கதாபாத்திரங்களில் மட்டும் நடிப்பேன். தற்போது 2 மலையாள படங்களில் நடித்து வருகிறேன், என்றார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!