Menu Left Menu Right
முக்கிய செய்திகள்
பெட்ரோல் விலை: மோடி கருத்து
Default

பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதன் மூலம் எல்லா துறைகளிலும் காங்கிரஸ் தோல்விடைந்துள்ளது என்பதனை காட்டுகிறது என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறினார்.
பெட்ரோல் விலை ரூ 7.50 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தனது டுவீட்டரில் கூறியதாவது; பெட்ரோல் விலையை பன்மடங்கு உயரத்தியதன் மூலம் மத்திய அரசு எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோல்விக்கு இது ஒன்றே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
பாராளுமன்றத்தில் ஜனநாயகத்திற்கு அவமரியாதையை தேடி தந்துவிட்டது. இதனை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். பெட்‌ரோல் விலையை உயர்த்தி குஜராத் மக்களின் தலையில் பெரும் சுமையை ஏற்றிவைத்துவிட்டது என்றார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!