Menu Left Menu Right
முக்கிய செய்திகள்
"தல தோனிக்கு "சூப்பர் விசில் அடிங்க! * சென்னைக்கு வெற்றி தேடித் தந்தார் * மும்பை அணிக்கு "பை-பை
Default

ஐ.பி.எல்., தொடரின் "எலிமினேட்டர் போட்டியில் கேப்டன் தோனியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. சொதப்பலாக ஆடிய மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியது.
பெங்களூருவில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் "பிளே-ஆப் சுற்றின் இரண்டாவது போட்டியில்(எலிமினேட்டர்) சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் களமிறங்கின. "டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்பஜன், "பீல்டிங் தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:
சென்னை அணி திணறல் துவக்கம் கண்டது. ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. தவால் குல்கர்னி வீசிய அடுத்த ஓவரில் மிகப் பெரும் "ஷாக் காத்திருந்தது. முதல் பந்தில் முரளி விஜய்(1) அவுட்டானார். இரண்டாவது பந்தில் ரெய்னா(0) போல்டானார். அடுத்த பந்தை குல்கர்னி "வைடாக வீச, "ஹாட்ரிக் வாய்ப்பு நழுவியது. ஹர்பஜன் தனது இரண்டாவது ஓவரை "மெய்டனாக வீச, ரன் வறட்சி ஏற்பட்டது.
அசத்தல் ஜோடி:
பின் பத்ரிநாத், மைக்கேல் ஹசி சேர்ந்து அணியை மீட்டனர். தவால் குல்கர்னி ஓவரில் பத்ரிநாத் 2 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஹர்பஜன் ஓவரில் ஹசி 2 பவுண்டரி விளாசினார். போலார்டு ஓவரில் பத்ரிநாத் 2 பவுண்டரி அடிக்க, 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 61 ரன்கள் என்ற கவுரவமான நிலையை எட்டியது. தொடர்ந்து ஹர்பஜன் ஓவரில் பத்ரிநாத் ஒரு சிக்சர், ஹசி ஒரு இமாலய சிக்சர், பவுண்டரி அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். போலார்டு பந்தில் பத்ரிநாத்(47) அவுட்டானார். பிராங்க்ளின் "வேகத்தில் ஹசி(49) அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா(1) வழக்கம் போல் ஏமாற்றினார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!