Menu Left Menu Right
சற்று மு‌‌ந்‌‌தைய செய்தி
நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்
Defaultநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது. அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரில், மொத்தம் 28 அமர்வுகள் உள்ளன.

இதில், 8ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 10ஆம் தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.

கூட்டத்தொடரின் முதல்நாளான திங்கள்கிழமையன்று, இராக்கில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கௌடா தாக்கல் செய்கிறார்.

அதற்கடுத்த நாளான 9ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையையும், 10ஆம் தேதி 2014-2015ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டையும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம்: மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்து பெறத் தேவையான 10 சதவீத இடங்களில் (55 தொகுதிகள்) எந்த அரசியல் கட்சியும் வெற்றி பெறவில்லை. ஆளும் கட்சியான பாஜகவுக்கு அடுத்து, அதிகபட்சமாக 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்தில் அக்கட்சி பிரச்னை எழுப்பக்கூடும்.

இதனால், ஆளும் பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழலாம் என்று கூறப்படுகிறது.

விலைவாசி பிரச்னை: இக்கூட்டத்தொடரில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு, ரயில்வே கட்டண உயர்வு, நாட்டின் கூட்டாட்சி அமைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன.

இதேபோல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்ட முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்தின் பெயரை மத்திய அரசு திருப்பியனுப்பிய விவகாரம், மத்திய இணையமைச்சர் நிகல்சந்த்துக்கு எதிரான பாலியல் புகார், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மத்திய அரசு வேண்டுகோள்: இந்நிலையில், "நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவசரச் சட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை: பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக தொலைதொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவை நியமிப்பதற்கு வசதியாக கடந்த மே மாதம் 28ஆம் தேதி மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

இதுபோல், புதிய ஆந்திர அரசின் கீழ் போலாவரம் நீர்மின்நிலையத் திட்டத்தை நிறைவேற்ற வசதியாக அந்த மாநிலத்துடன் தெலங்கானாவில் உள்ள சில கிராமங்களை இணைப்பதற்கான அவசரச் சட்டம் கடந்த மே மாதம் 29ஆம் தேதி கொண்டு வரப்பட்டது.

இந்த 2 அவசரச் சட்டங்கள், மற்றும் நிலுவையில் இருக்கும் பல்வேறு மசோதாக்களையும் இக்கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா?: மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி உச்சவரம்பு தற்போது ஆண்டுக்கு ரூ. 2 லட்சமாக உள்ளது. இதை ரூ. 5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு வெளியிடுமா? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!