Menu Left Menu Right
சற்று மு‌‌ந்‌‌தைய செய்தி
இராக்கில் 46 இந்திய செவிலியர்கள் விடுவிப்பு
Default



இராக்கில் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்களும் சனிக்கிழமை காலையில் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இதையொட்டி, தில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான "போயிங் 747' விமானம் இரவு எர்பில் நகரில் தரையிறங்கியது. செவிலியர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவதற்காக கேரள அரசு உயரதிகாரிகள், வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் அடங்கிய குழு அந்த விமானத்தில் சென்றுள்ளது.

இராக்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் பராமரிப்பில் தற்போதுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் உணவு, உடை போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களை அழைத்து வரும் தனி விமானம், இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை சுமார் 6.30 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இராக்கில் திக்ரித் பகுதியை ஐஎஸ்ஐஎஸ் சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் சில வாரங்களுக்கு முன்பு கைப்பற்றினர். அப்போது அங்குள்ள மருத்துவமனையை தீவிரவாதிகள் சிறைப்பிடித்தனர். இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 46 இந்திய செவிலியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

அவர்களை மீட்பது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடந்த வியாழக்கிழமை தில்லி வந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரை உம்மன் சாண்டியும், பிரதமர் நரேந்திர மோடியை கேரள நிதியமைச்சர் கே.எம்.மணியும் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தீவிரவாதக் குழுக்களுடன் பல்வேறு சமூக ஆர்வலர்கள், சர்வதேச அமைப்புகள் மூலம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி 46 செவிலியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பயனாக, 46 செவிலியர்கள் உள்ளிட்ட சிலரை தங்கள் பிடியில் இருந்து தீவிரவாதிகள் வியாழக்கிழமை மாலையில் விடுவித்தனர். ஆனால், அவர்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட திக்ரித் பகுதியில் இருந்து மொசூல் நகருக்குத் திரும்புவதற்குள் பல்வேறு இடங்களில் வன்முறை, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களை சந்திக்க நேர்ந்தது.

விடுவிக்க சம்மதம்: இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்களும் பத்திரமாக மொசூல் நகருக்குத் திரும்பினர். அவர்களைச் சந்தித்த இராக் தூதரக அதிகாரிகள் செவிலியர்கள் தங்குவதற்கும், தாயகத்தில் உள்ள உறவினர்களிடம் தொலைபேசி மூலம் பேசுவதற்கும் ஏற்பாடு செய்தனர்.

இதற்கிடையே, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீண்டும் வெள்ளிக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினார். அப்போது, இராக்கில் இருந்த செவிலியர்கள் தூதரக அதிகாரிகள் உதவியுடன் சுஷ்மா ஸ்வராஜுடனும் உம்மன் சாண்டியுடனும் பேசினர். "எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. பத்திரமாக மொசூல் நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இந்தியாவில் இருந்து வரும் விமானத்துக்காகக் காத்திருக்கிறோம். உணவும், உடைமைகளும் வழங்கப்பட்டுள்ளன' என்று செவிலியர்கள் தெரிவித்தனர்.

மீட்பு நடவடிக்கை: இத்தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய உம்மன் சாண்டி, "இராக்கில் உள்ள செவிலியர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும், வெளியுறவுத் துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். செவிலியர்களை மீட்க இந்தியாவில் இருந்து தனி விமானம் அனுப்பப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்' என்று கூறினார்.

இராக் சென்றது விமானம்: இந்நிலையில், இராக்கில் உள்ள செவிலியர்களை அழைத்து வருவதற்காக தில்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை மாலையில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானம் எர்பில் நகர் விமான நிலையத்தில் இரவு தரையிறங்கியது. இத்

தகவலை இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன், தில்லியில் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். "இராக்கில் உள்ள செவிலியர்கள் பெரும்பாலும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே, அந்நாட்டில் இருந்து புறப்படும் தனி விமானம் கொச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலையில் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.

கொச்சியில் ஏற்பாடு: இது பற்றி தில்லியில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில் "செவிலியர்கள் மட்டுமின்றி வேறு சில இந்தியர்களும் இராக்கில் கலவரப் பகுதிகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. அதனால், தயார் நிலையில் இரு ஜம்போ ரக ஜெட் விமானங்களை வைத்திருக்கும்படி விமான போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மீட

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!