Menu Left Menu Right
விளையாட்டு
கறுப்பு குதிரை பெல்ஜியம் கலக்கல்
Default

சால்வடார்: உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு பெல்ஜியம் அணி முன்னேறியது. அமெரிக்கா பரிதாபமாக வெளியேறியது.

பிரேசிலில், 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. சால்வடாரில் நடந்த ‘ரவுண்டு–16’ சுற்றுப் போட்டியில், உலகின் ‘நம்பர்–11’ பெல்ஜியம் அணி, 13வது இடத்தில் உள்ள அமெரிக்காவை எதிர்கொண்டது.

இத்தொரில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தக்கூடிய ‘கறுப்பு குதிரையாக’ பெல்ஜியம் வர்ணிக்கப்பட்டது. இதற்கேற்ப ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது. நேற்றும் அசத்தியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்தில், பெல்ஜியத்தின் டி புருய்னே கொடுத்த ‘பாஸை’ ஆரிஜி கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால் அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டு அருமையாக தடுத்தார். இதேபோல 23வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் டி புருய்னே கோலடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அமெரிக்க வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்க, முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் பெல்ஜியத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆனால், அமெரிக்க கோல்கீப்பர் டிம் ஹோவர்டு அரணாக இருந்ததால், இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. 93வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கெவின் டி புருய்னே முதல் கோல் அடித்து நம்பிக்கை தந்தார். தொடர்ந்து அசத்திய பெல்ஜியம் அணிக்கு 103வது நிமிடத்தில் ரோமேலு லுகாகு, தன்பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, 2–0 என முன்னிலை பெற்றது. போராடிய அமெரிக்க அணிக்கு 107வது நிமிடத்தில் மைக்கேல் பிராட்லி கொடுத்த ‘பாஸை’ ஜூலியன் கிரீன் கோலாக மாற்றி ஆறுதல் தந்தார். முடிவில் பெல்ஜியம் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

28

பெல்ஜியம் அணி, 28 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது. கடைசியாக 1986ல் நடந்த தொடரில் அரையிறுதி வரை சென்ற பெல்ஜியம் அணி, 4வது இடம் பிடித்தது.

16

கீப்பராக அசத்திய அமெரிக்காவின் டிம் ஹோவர்டு, 16 முறை பெல்ஜியம் வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சியை தடுத்தார். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், ஒரு போட்டியில் அதிக முறை எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சியை தடுத்த கோல் கீப்பர் என்ற புதிய வரலாறு படைத்தார். முன்னதாக 1978ல் நடந்த உலக கோப்பையில், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில், பெரு அணியின் கோல் கீப்பர் ரமோன் குய்ரோகா 13 முறை தடுத்தார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!