Menu Left Menu Right
சற்று மு‌‌ந்‌‌தைய செய்தி
ஜூலை 7-இல் பி.இ. கலந்தாய்வு
Default



உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கான அறிவிப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட புதிய கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) நிலுவையில் உள்ள பொறியியல் கல்லூரி விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய ஒரு வாரகால அவகாசத்தை அளித்து உச்ச நீதிமன்றம் ஜூன் 26-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு காரணமாக ஜூன் 27-ஆம் தேதி தொடங்கவிருந்த பொதுப் பிரிவு கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இதனால் பாதிப்புக்கு ஆளான மாணவர்களும் பெற்றோரும், கலந்தாய்வு மறு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந் நிலையில், ஏஐசிடிஇ-யின் அனுமதி மற்றும் தமிழக அரசின் ஒப்புதலின் அடிப்படையில் ஜூலை 7-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில் பொதுப் பிரிவு கலந்தாய்வு புதிய கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்ற்ய்ங்ஹ2014 என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

சுற்றுகளின் எண்ணிக்கை உயர்வு: முன்னர் ஜூன் 27-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை 32 நாள்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ஜூலை 7-இல் தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 29 நாள்கள் மட்டுமே நடத்தப்படுகிறது.

நாள்களின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால், ஒரு நாளுக்கான சுற்றுகளின் எண்ணிக்கை 8-லிருந்து 9-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், முதல் நாளான 7-ஆம் தேதி மட்டும் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. இறுதிச் சுற்று இரவு 7 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் கட்-ஆஃப் 200-க்கு 200 பெற்றவர்கள் முதல் குறைந்தபட்சம் 198.75 கட்-ஆஃப் பெற்றவர்கள் வரையில் 3 ஆயிரம் பேர் அளவுக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வின் இரண்டாம் நாளிலிருந்து முதல் சுற்று காலை 7 மணிக்குத் தொடங்கப்படும். பின்னர் 8.30, 10.00, 11.30, 1.00, 2.30, 4.00, 5.30, 7.00 மணி என 9 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது.

கலந்தாய்வு மறு தேதி அறிவிப்பு குறித்த தகவல் விண்ணப்பித்துள்ள 1.70 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அதாவது நாளொன்றுக்கு 5000 பேருக்கு பதிலாக 5,500 பேர் வீதம் கலந்து கொள்வர்.

மாணவர்கள் அவர்களுடைய சுற்று தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக கலந்தாய்வு வளாகத்துக்கு வந்துவிட வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.



தொழில் பிரிவு மாணவர்களுக்கு... பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததுபோல் ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை 10 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு தேதி அட்டவணையும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!