Menu Left Menu Right
விளையாட்டு
அல்ஜீரியாவை விரட்டியது ஜெர்மனி
Default



போர்டோ அல்கிரே: அல்ஜீரியாஅணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்டு–16’ சுற்று போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.

பிரேசிலில், 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. போர்டோ அல்கிரேவில் நடந்த இன்றைய ‘ரவுண்டு–16’ சுற்று போட்டியில், மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற உலகின் ‘நம்பர்–2’ ஜெர்மனி அணி, அல்ஜீரியாவை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க மும்முரமாக முயற்சித்தனர். இருப்பினும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

பின் விறுவிறுப்பாக துவங்கிய இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து போட்டி 0-0 என ‘டிரா’ ஆனது. பின் நடந்த கூடுதல் நேரத்தின் துவக்கத்திலேயே ஜெர்மனி வீரர் ஸ்கூரல் (90+2) முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து அசத்திய ஜெர்மனி அணிக்கு கடைசி நிமிடத்தில் ஓசில் (120) இரண்டாவது கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அல்ஜீரியா வீரர் டிஜாபாவ் (120+1) இதற்கு பதிலடி கொடுத்தும் எந்த புண்ணியமும் இல்லாமல் போனது. இதன்மூலம் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.



32 ஆண்டுகளுக்கு பின்.....



அல்ஜீரியாவை 1-2 என வீழ்த்திய ஜெர்மனி அணி, கடந்த 1982ல் நடந்த உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில், அடைந்த தோல்விக்கு 32 ஆண்டுகளுக்கு பின் தற்போது பழிதீர்த்துக் கொண்டது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!