Menu Left Menu Right
விளையாட்டு
கோஸ்டாரிகாவிடம் சறுக்கியது கிரீஸ்
Default

ரெசிபி: கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான பரபரப்பான 'பெனால்டி ஷூட்-அவுட்டில்' சொதப்பிய கிரீஸ் அணி, உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இன்று நடந்த 'நாக்-அவுட்' முறையிலான 'ரவுண்டு-16' போட்டியில், கோஸ்டாரிகா அணி, கிரீஸ் அணியை சந்தித்து. போட்டியின் துவக்கம் முதல் இரு அணி வீரர்களுமே கோல் அடிக்க கடுமையாக போராடினர். இருப்பினும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கமுடியவில்லை. இதையடுத்து போட்டி 0-0 என சமநிலை வகித்தது.

பின் பலத்த எதிர்பார்ப்புடன் ஆரம்பித்த இரண்டாவது பாதியின் ஆரம்பம் முதல் கோஸ்டாரிகா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அந்த அணியின் ரூயிஸ் 52வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். இதற்குகிரீஸ் வீரர் சாக்ரடிஸ் (90+1) போட்டியின் கடைசி நிமிடத்தில் பதிலடி கொடுக்க, போட்டி 1-1 என 'டிரா' ஆனது.

இதைதொடர்ந்து நடந்த கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் மந்தமாக ஆட்டத்தை வெளிப்படுத்த கோல் எதுவும் அடிக்க இயலவில்லை. இதையடுத்து முடிவு 'பெனால்டி ஷூட் -அவுட்' மூலம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் கோல் வாயப்பை சிறப்பாக பயன்படுத்திய கோஸ்டா ரிகா அணிக்கு முதல் வாய்ப்பில் போர்ஜஸ் கோல் அடித்தார். கிரீஸ் வீரர் மிட்‌ரோகிலோ கோல் அடித்தார்.

* இரண்டாவது வாய்ப்பில் கோஸ்டாரிகாவின் ரூயிஸ், கிரீசின் லசாராஸ் ஆகியோர் கோல் அடித்தனர்.

* மூன்றாவது வாய்ப்பிலும் கோஸ்டாரிகாவின் கான்சாலஸ், கிரீஸ் வீரர் சோலிவஸ் கோல் அடித்தார்.

* நான்காவது வாய்ப்பையும் கோஸ்டாரிகா வீரர் கேம்பல் கோலாக மாற்றினார். இம்முறை கிரீஸ் வீரர் ஜீகஸ் அடித்த கோஸ்டாரிகா கோல்கீப்பர் நவாஸ் துடிப்பாக தடுத்தார்.



* தொடர்ந்து கிடைத்த ஐந்தாவது வாய்ப்பையும் கோஸ்டாரிகா வீரர் உமானா கோல் அடிக்க, கிரீஸ் அணிக்கு அடுத்த வாய்ப்பே இல்லாமல் போனது. இதன் மூலம் கோஸ்டாரிகா அணி பெனால்டி ஷூட் அவுட் மூலம் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. கோஸ்டா ரிகா அணி வரும் 5ம் தேதி நடக்கும் சால்வேடரில் நடக்கும் காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!