Menu Left Menu Right
விளையாட்டு
காலிறுதியில் கால் பதிக்குமா பிரேசில்
Default

பெலோ ஹரிஜான்டே: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் ‘ரவுண்டு– 16’ சுற்றில், பிரேசில், சிலி அணிகள் மோதுகின்றன. இதில், நெய்மர் கைகொடுக்கும் பட்சத்தில், பிரேசில் அணி சுலபமாக காலிறுதிக்கு முன்னேறலாம்.

பிரேசிலில், 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள், இன்று முதல் ‘நாக்–அவுட்’ போட்டிகளில் பங்கேற்கின்றன. பெலோ ஹரிஜான்டேவில் இன்று நடக்கும் ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்றுப் போட்டியில், உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள பிரேசில் அணி, 14வது இடத்தில் உள்ள சிலியை எதிர்கொள்கிறது.

நெய்மர் நம்பிக்கை:

லீக் சுற்றில், குரோஷியாவை வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் துவக்கிய பிரேசில் அணி, மெக்சிகோவிடம் ‘டிரா’ செய்தது. பின் எழுச்சி கண்ட பிரேசில் அணி, காமரூன் அணியை வீழ்த்தி, ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்தது. சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களமிறங்கும் பிரேசில் அணிக்கு நெய்மர் நம்பிக்கை அளிக்கிறார். குரோஷியா, காமரூன் அணிகளுக்கு எதிராக தலா 2 கோல் அடித்த இவர், இன்றும் அசத்தலாம். லீக் சுற்றில் தலா ஒரு கோல் அடித்த ஆஸ்கர், பிரெட், பெர்னாண்டினோ மீண்டும் சாதிக்கலாம். இவர்களை தவிர கேப்டன் தியாகோ சில்வா, டேவிட் லுாயிஸ், மார்செலோ, ஹல்க், மேக்ஸ்வெல், ஜோ, ரமிரஸ் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில், காலிறுதிக்கு சுலபமாக முன்னேறலாம். லீக் சுற்றில், ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய ஸ்பெயினை, சிலி அணி வீழ்த்தியதால், பிரேசில் வீரர்கள் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும்.

பதிலடி வாய்ப்பு:

‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகளுக்கு அதிர்ச்சி தந்த சிலி அணி, நெதர்லாந்திடம் தோல்வி அடைந்து, 2வது இடம் பிடித்தது. லீக் சுற்றில் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்ட அலெக்சிஸ் சான்செஸ், வால்டிவியா, பியாஸ்ஜுர், வர்காஸ், அராங்கிஸ் மீண்டும் கைகொடுக்கலாம். இவர்களை தவிர பிரான்சிஸ்கோ சில்வா, ஜாரா., கேரி மெடல், மார்செலோ டியாஸ் உள்ளிட்டோர் அசத்தும் பட்சத்தில், பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, 52 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் காலிறுதிக்கு முன்னேறலாம். தவிர, கடந்த முறை ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்றில் பிரேசிலிடம் கண்ட தோல்விக்கு பதிலடி தரலாம்.

68

சர்வதேச கால்பந்து அரங்கில், பிரேசில்–சிலி அணிகள் 68 முறை மோதின. இதில் பிரேசில் 48, சிலி 7 போட்டிகளில் வெற்றி பெற்றன. 13 போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன.

217

பிரேசில்–சிலி அணிகள் மோதிய 68 போட்டிகளில் மொத்தம் 217 கோல்கள் அடிக்கப்பட்டன. இதில் பிரேசில் 159, சிலி 58 கோல்கள் அடித்தன.

3

உலக கோப்பை வரலாற்றில் சிலிக்கு எதிராக விளையாடிய மூன்று போட்டியிலும் பிரேசில் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 1962ல் நடந்த அரையிறுதியில் பிரேசில் அணி 4–2 என வெற்றி பெற்றது. பின், 1998ல் நடந்த ‘ரவுண்ட்– 16’ சுற்றில் பிரேசில் அணி 4–1 என வென்றது. கடந்த முறை (2010) நடந்த ‘ரவுண்ட் – 16’ சுற்றில் பிரேசில் அணி 3–0 என சிலியை வீழ்த்தியது.

* உலக கோப்பை தகுதிச் சுற்றில் இவ்விரு அணிகள் 10 முறை மோதின. இதில் பிரேசில் 7, சிலி ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. மீதமுள்ள இரண்டு போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன.

கொலம்பியா–உருகுவே பலப்பரீட்சை
ரியோ டி ஜெனிரோ: மற்றொரு ‘ரவுண்ட் ஆப் 16’ போட்டியில், உலகின் ‘நம்பர்–7’ உருகுவே அணி, 8வது இடத்தில் உள்ள கொலம்பியாவை சந்திக்கிறது. சர்வதேச கால்பந்து அரங்கில் இவ்விரு அணிகள் 38 முறை மோதின. இதில் உருகுவே 18, கொலம்பியா 11 போட்டிகளில் வெற்றி பெற்றன. ஒன்பது போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன. உலக கோப்பையில் இவ்விரு அணிகள் மோதிய ஒரே ஒரு போட்டியில் (1962), உருகுவே அணி வென்றது. உலக கோப்பை தகுதிச் சுற்றில் மோதிய 16 போட்டிகளில், உருகுவே 6, கொலம்பியா 5ல் வெற்றி பெற்றன. ஐந்து போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன.

ரோட்ரிக்ஸ் நம்பிக்கை:

‘சி’ பிரிவில் கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான் அணிகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற கொலம்பிய அணி முதலிடம் பிடித்தது. லீக் சுற்றில் கோலடித்து அசத்திய ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (3 கோல்), ஜாக்சன் மார்டினஸ் (2 கோல்), அர்மெரோ, தியோபிலோ, குயின்டர்மோ, குயட்ரடோ (தலா ஒரு கோல்) ஆகியோர் இன்றும் கைகொடுக்கலாம். கேப்டன் மரியோ யெப்ஸ், சாண்டியாகோ ஆரிஸ், கார்லஸ் சான்செஸ், கார்லஸ் பக்கா, அட்ரியன் ரமோஸ் உள்ளிட்டோர் அசத்தும் பட்சத்தில் முதன்முறையாக காலிறுதிக்கு தகுதி பெறலாம்.

சாரஸ் பின்னடைவு:

கோஸ்டாரிகாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட உருகுவே அணி, இங்கிலாந்தை வீழ்த்தி எழுச்சி கண்டது. பின், இத்தாலிக்கு அதிர்ச்சி தந்த உருகுவே அணி, ‘டி’ பிரிவில் 2வது இடம் பிடித்தது. இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு கோல் அட

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!