Menu Left Menu Right
சினிமா
நடிகை நீபா திருமணம்
Default

பதிவு செய்த நாள் : May 28 | 11:21 pm
சென்னை

நடிகை நீபா திருமணம் சென்னையில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. தொழில் அதிபரை அவர் மணக்கிறார்.

நீபா

‘காவலன்’, ‘பெருசு’, ‘பள்ளிக்கூடம்’, ‘தோட்டா’, ‘கண்ணும் கண்ணும்’, ‘அம்முவாகிய நான்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நீபா. சின்னத்திரை தொடர்களிலும் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். இவர், தமிழ் திரையுலகின் பிரபல நடன அமைப்பாளர்களான வாமன்–மாளினியின் மகள். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் பெயர் சிவக்குமார். இவர் வேலூரை சேர்ந்தவர். கட்டுமான தொழில் செய்து வருகிறார்.

திருமணம்

நீபா–சிவக்குமார் திருமணம் சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஸ்ரீலட்சுமி பிரசன்னா மகாலில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு அதே மண்டபத்தில் நடக்கிறது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!